வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: கனடாவில் ஹிந்துக் கோயிலுக்குள் புகுந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். கனடாவில் ஹிந்து கோயில் அவமதிக்கப்படுவது இது 4வது முறையாகும்.
கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் லஷ்மி நாராயணர் கோயில் உள்ளது. பழமையான கோயிலுக்குள் வந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் இரண்டு பேர், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மேலும், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி போஸ்டர்களை ஒட்டினர். கோயிலின் நுழைவு வாயில் மற்றும் கோயில் சுவர்களில் ஒட்டியுள்ளனர்.
‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளதா என பயங்கரவாதிகள் விசாரிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
கனடாவில் ஹிந்து கோயில்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் அவமதிக்கப்படுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னர், ஆன்டாரியோவில் சுவாமிநாராயணன் கோயில் தாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது. பிப்ரவரி மாதம் மிஸ்ஸிஸாகுவா பகுதியில் உள்ள ராமர் கோயிலும், பிராம்டன் பகுதியில் உள்ள கோயிலும் அவமரியாதை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement