7 மசோதாக்களுக்கு
ஜனாதிபதி ஒப்புதல்நாட்டு மக்களின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றியது. இதன்படி, தனிநபர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், புதுடில்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் போன்றவற்றை மேற்கொள்வதற்கு துணை நிலை கவர்னருக்கே அதிகாரம் உள்ளது என்பதை வலியுறுத்தும் புதுடில்லி நிர்வாக சீர்திருத்த மசோதாவும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அரசு பணிகளில் சேருவது முதல், ஓட்டுனர் உரிமம் எடுப்பது வரையிலான அனைத்து விதமான அரசு சார்ந்த பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதாவும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், சிறு குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், ‘ஜன் விஸ்வாஸ்’ சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்த நான்கு மசோதாக்கள் உட்பட ஏழு மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்த மசோதாக்கள் சட்டமாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement