போலா சங்கர் படத்தை திரையிடுவதை தடுத்து நிறுத்திய போலீஸார்

கடந்த அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானது. இதற்கு ஒரு நாள் கழித்து ஆகஸ்ட் 11ம் தேதி (நேற்று) சிரஞ்சீவி நடிப்பில் உருவான போலா சங்கர் திரைப்படம் வெளியானது. தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் ஆக உருவாகி உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

நேற்று வெளியான இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே சற்று நெகட்டிவான விமர்சனங்கள் தான் வெளியாகி வந்தது. அதே சமயம் சிரஞ்சீவியின் நடிப்பிற்கு பாராட்டுகளும் குவிந்து வந்தது. இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் பாபட்லாவில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு சென்ற போலீசார் அங்கு போலா சங்கர் திரைப்படத்தை திரையிட அனுமதி மறுத்தனர். அரசாங்கம் அனுமதித்த கட்டணத்தை விட அதிகாரப்பூர்வமற்ற முறையில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் அதனாலேயே போலா சங்கர் காட்சியை திரையிட அனுமதிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதே சமயம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் மீதுள்ள தனிப்பட்ட துவேசத்தை வெளிப்படுத்தும் விதமாக இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார் என சிரஞ்சீவி ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.