AI உலகில் உங்கள் மொபைல் எண் மோசடியில் சிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்

தொழில்நுட்ப உலகில் அடுத்த புரட்சியாக செயற்கை நுண்ணறிவு உலகத்துக்குள் இப்போது நுழைந்திருக்கிறோம். தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இதனைப் பற்றி ஏற்கனவே தெளிவாக தெரிந்திருந்தாலும், எளிய மக்களும் அதனை பயன்படுத்தும் நிலை வந்திருக்கிறது. இங்கு தான் ஆபத்தும் அதிகமாக உருவாகியுள்ளது. ஆரோக்கியமான அம்சங்கள் இருக்கும அதே வேளையில் ஆபத்து காரணிகளும் இதில் மலைபோல் குவிந்திருக்கின்றன. கத்தியைப் போல் தான், பயன்படுத்துப்பவர்களைப் பொறுத்து அதன் விளைவும் இருக்கும். 

இனி நேரில் சென்று திருடுவது, மிரட்டுவது என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. ஆன்லைன் வழியே முகம் தெரியாத மனிதர்களின் வலையில் சிக்கித் தவிக்கும் காலத்துக்கு நகர்ந்திருக்கிறோம். அதேநேரத்தில் முன்னெச்சரிக்கையாகவும், விழிப்புணர்வாகவும் இருக்கும் சமயத்தில் இந்த ஆன்லைன் மோசடிகளில் இருந்து நம்மை நாம் நிச்சயமாக தற்காத்துக் கொள்ளலாம். மோசடிகள் பலவிதம் என்றாலும், ஒருவரின் செல்போன் எண் மட்டும் இருந்தால் போதும், ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கி கணக்கு விவரங்கள் வரை இப்போது எடுத்துவிட முடியும் என நிலை வந்துவிட்டது. 

அதனால், அந்த மொபைல் எண்ணை பத்திரமாக பாதுகாப்பது எப்படி? மோசடியாளர்கள் எப்படியெல்லாம் அதனை பயன்படுத்த வழிகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வது அவசியம். 

தேவையற்ற செயலிகளை நீக்குதல்

மொபைலில் இருக்கும் தேவையற்ற செயலிகளை முதலில் அடையாளம் கண்டு அதனை உடனடியாக நீக்கிவிடுங்கள். பெரும்பாலான மோசடிகள் தேவையற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்வதன் வழியாகவே நடைபெறுகிறது. சில செயலிகள் தேவையே இல்லாமல் உங்கள் மொபல் எண்ணுக்கான அணுகலை எல்லாம் கேட்கும். அதற்கு நீங்கள் ஓகே கொடுக்கும்போது உங்களின் தரவுகளை அது எடுத்துக் கொள்ளும். அதனால், தேவையற்ற செயலிகளை நீங்கள் நீக்கிவிடுவது நல்லது. 

சோஷியல் மீடியா புரொபைல்

நீங்கள் அதிகம் சோஷியல் மீடியா அதிகம் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் உங்கள் மொபைல் எண் பொதுவெளியில் தெரியுமாறு பதிவிட வேண்டாம். உங்கள் தொடர்பு தகவல்களை யாரெல்லாம் பார்க்கலாம் என்று கட்டுப்படுத்தும் தனியுரிமை அமைப்புகளை அமைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பாதுகாப்பான நட்பு வட்டத்தில் உள்ள நபர்களின் கைகளில் மட்டுமே உங்கள் மொபைல் எண் இருக்கும். பொதுவெளியில் இருக்கும் அதனை தவறாகவோ அல்லது மார்க்கெட்டிங் உபயோகத்துக்காக எடுத்து தொல்லை கொடுப்பார்கள். 

இணையதளங்களில் கவனம்

நீங்கள் இணையதளங்களில் இருக்கும்போது, ஏதேனும் ஒரு தளத்துக்குள் சென்று உங்கள் மொபைல் எண்ணை பதிவிடுகிறீர்கள் என்றால் அந்த தளத்தின் நம்பகத்தன்மையை தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் ஃபோன் எண்ணைப் பகிர்ந்துள்ள இணையதளங்களை, குறிப்பாக நீங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கும் இணையதளங்களை மீண்டும் பார்வையிடவும். உங்கள் ஃபோன் எண்ணை அகற்றவும் அல்லது அதன் தெரிவுநிலையைக் கட்டுப்படுத்த உங்கள் விருப்பத்தேர்வுகளைப் புதுப்பிக்கவும்.

இன்காக்னி பயன்படுத்துங்கள்

இணையதளங்களில் இன்காக்னி என்ற அம்சத்தை நீங்கள் பயன்படுத்தும்போது தேவையற்ற தரவுகள் இணையத்தில் சேமிப்பதும், உங்களின் தனிப்பட்ட விவரங்களும் பாதுகாப்பாக இருக்கும். இந்த தளம் உங்களை மோசடி செய்பவர்கள் அதிகம் உபயோகிக்கும் தேடல் தளங்களில் இருந்து உங்களின் தரவுகளை தானாகவே அகற்றிவிடும். எப்போதும் இணையம் சென்றாலும் கூகுளில் இருக்கும் இன்காக்னிடோவை பயன்படுத்துவது ஒரு வகையான பாதுகாப்பு அம்சமாகும்.  அடையாளத் திருட்டைத் தடுப்பது முதல் மோசடி அழைப்புகள் வரை, இந்த டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு எதிரான விரிவான கவரேஜை Incogni வழங்குகிறது. ஆன்லைன் பாதுகாப்பின் நிலப்பரப்பு உருவாகும்போது, இன்காக்னி போன்ற புதுமையான கருவிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் மன அமைதியை வழங்குகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.