வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இலவச பயணத்திற்கு ரெடியா? ஒடிசாவில் வச்சு பலே ஏற்பாடு!

இன்றைய தேதிக்கு இந்தியாவின் அதிவேக ரயில் என்றால் பலரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தான் கைகாட்டுவர். அதிகபட்சம் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறப்பம்சம் என்னவெனில், சென்னை ஐ.சி.எஃப்பில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது தான். இது பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடம் என்பது கவனிக்கத்தக்கது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் பயண நேரம் குறைவதுடன், சொகுசாகவும் பயணிக்கலாம். கிட்டதட்ட விமானத்தில் பயணிப்பது போன்ற சிறிதும் அதிர்வில்லாத அனுபவம் கிடைப்பதாக பயணிகள் கூறுவதை கேட்க முடிகிறது. இதுவரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 2 ரயில் சேவைகள் கிடைத்துள்ளன.பூரி – ஹௌரா ரயில் சேவைஅடுத்தகட்டமாக சென்னை – விஜயவாடா, திருநெல்வேலி – சென்னை என புதிதாக 2 ரயில்கள் வரவுள்ளன. இதுதவிர வந்தே மெட்ரோ என்ற பெயரில் சென்னை – திருப்பதி இடையில் அதிவேக ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இனி விஷயத்திற்கு வருவோம். ஒடிசாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெருமையை பெற்றது பூரி – ஹௌரா ரயில் சேவை. இதனை கடந்த மே 18ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இலவச பயணம்இந்த ரயிலில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயண அனுபவத்தை அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முன்னதாக ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்ற பூமி பூஜையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் உரையாடினார்.
​பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது, அதில் பயணிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் விரும்புகின்றனர். இந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் போட்டி ஒன்று நடத்தப்படும். அதன்மூலம் 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இலவசமாக அழைத்து செல்லப்படுவர் எனக் கூறினார்.
ரயில்வே அமைச்சர் நேரில் செல்கிறார்இந்த அறிவிப்பு மாணவ, மாணவிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போதைக்கு சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே எனக் கூறப்பட்டுள்ளது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனை இன்றைய தினம் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்அம்ரித் பாரத் ஸ்டேஷன் என்ற திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து 25 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்கும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 18 ரயில் நிலையங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.