Suriya:ரோலக்ஸை மையமாக வைத்து கதை சொன்ன லோகேஷ் கனகராஜ்: ஓகே சொன்ன சூர்யா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் சாராக நடித்து ரசிகர்களை மிரட்டியிருந்தார் சூர்யா. கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்களே வந்தபோதிலும் அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்தார்.

சொல்லி அடித்த நெல்சன் ரஜினியின் பெரிய Hit
விக்ரம் படம் ரிலீஸான போது ட்விட்டரில் தினமும் டிரெண்டானார் ரோலக்ஸ் சார். ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த கமல் ஹாசன் தன்னுடைய ரோலக்ஸ் வாட்ச்சை சூர்யாவுக்கு பரிசாக அளித்தார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ரோலக்ஸ் சாரை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இந்நிலையில் சூர்யா தன் ரசிகர்களை சந்தித்து பேசினார்.

அப்பொழுது அவர் கூறியதாவது,

விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து லோகேஷ் கனகராஜ் என்னிடம் ஒரு ஒன் லைனர் சொன்னார். அது எனக்கு பிடித்துவிட்டது.

லோகேஷின் கனவுப் படமான இரும்புக் கை மாயாவி படத்திற்கு முன்பு ரோலக்ஸ் படத்தில் நடிப்பேன் என்றார்.

சூர்யா சொன்னதை கேட்டதும் ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். ரோலக்ஸ் சார் சும்மா வந்துவிட்டு போனதற்கே தியேட்டர்கள் அதிர்ந்தன. இந்நிலையில் ரோலக்ஸை மைமயாக வைத்து படம் என்றால் சொல்லவா வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

சூர்யா தன் மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்று கூறப்பட்டது. இது குறித்து சூர்யாவிடம் ரசிகர்கள் கேட்டார்கள். அதற்கு அவரோ, நான் மும்பையில் எல்லாம் செட்டில் ஆகவில்லை. சென்னையில் தான் இருக்கிறேன்.

என் பிள்ளைகள் மும்பையில் படிக்கிறார்கள். அவர்களை பார்க்க அடிக்கடி மும்பை சென்று வருகிறேன் என்றார்,

சூர்யா தன் பிள்ளைகளுடன் உணவகம் ஒன்றில் இருந்து வெளியே வந்த வீடியோ வெளியானது. காரின் பின் இருக்கையில் பிள்ளைகள் இருக்க சூர்யா தான் வாகனத்தை ஓட்டிச் சென்றார். அவரை அடிக்கடி மும்பையில் பார்ப்பதால் அவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார் என ரசிகர்கள் நினைத்துவிட்டார்கள்.

Siddique: மறைந்த இயக்குநர் சித்திக்கின் வீட்டிற்கு சென்று சூர்யா: வைரல் வீடியோ

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு நன்றாக வந்திருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜோ விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், அனுராக் கஷ்யப் உள்ளிட்டோரை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. லியோ படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். பான் இந்திய படமாக உருவாகியிருக்கிறது லியோ.

ரோலக்ஸ் பற்றிய பட வேலை விரைவில் துவங்கும் என தெரிவித்துள்ளார் சூர்யா. கங்குவா படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் சூர்யா. முன்னதாக சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்திற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

Jailer Collection: நாலே நாளில் ரூ. 300 கோடி வசூலித்த ஜெயிலர்: இந்தியாவில் மட்டும்…

இந்நிலையில் அந்த கூட்டணி மீண்டும் சேர்கிறது. சுதா தவிர்த்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு சூர்யா பட வேலையை துவங்குவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.