பெருந்தோட்டத்துறையினருக்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு

சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அனுசரனையுடன் பெருந்தோட்டத்துறையினருக்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வு கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது 200 வருடங்கள் ஆகியும் மலையக தோட்டத்துறையினரின் பாதுகாப்பும், சுகாதாரமும் இன்னும் ஒதுக்கப்பட்ட நிலையில் காணப்படுவதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் சுகாதார உரிமைகளையும், தொழில்சார் உரிமைகளையும் மீட்டெடுக்கும் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு, தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான்  தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் காப்பாளர்களான சிவராஜா, ஜெகதீஸ்வரன், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், திருமதி.அனுஷியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், பிரதி தவிசாளர் சட்டதரணி இராஜதுரை, பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, சிரேஸ்ட சட்டத்தரணி மாரிமுத்து,பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி, தொழிற்சங்க பிரிவின் சிரேஸ்ட பணிப்பாளர் ராஜமனி, உப தலைவர்கள், தொழிற்சங்க பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள், மாவட்ட தலைவர்கள், தலைவிகள், அமைப்பாளர்கள், சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் ஆநோப் ஷட்பதி மற்றும் தொழில் திணைக்களத்தின் மேலதிக பொது தொழில் ஆணையாளர் அபேயசிரிவர்த்தன, முதலாளிமார் சம்மேளனத்தின் சிரேஸ்ட உதவி பொது இயக்குனர் பிரசாத் .டி. சில்வா, பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார பிரிவின் பொறுப்பாளர் டாக்டர். சரத் அமுனுகம, உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.