Leo: 'ஜெயிலர்' கொண்டாட்டத்துக்கு இடையில் வெளியாகும் 'லியோ' அப்டேட்: சம்பவம் இருக்கு..!

‘ஜெயிலர்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் விஜயண்ணா ரசிகர்கள் லியோ அப்டேட்டிற்காக காத்திருக்க ஆரம்பித்து விட்டனர். ‘விக்ரம்’ படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த கையோடு ‘லியோ’ படத்தை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கோலிவுட் சினிமா இந்தப்படத்திற்காக வெறித்தனமாக காத்து வருகிறது.

கோலிவுட் சினிமாவின் டாப் நடிகரான விஜய்யும், தற்போதைய தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனரான லோகேஷ் கனகராஜும் இரண்டாவது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளனர். ஏற்கனவே இந்த கூட்டணி ‘மாஸ்டர்’ என்ற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்தது. வசூலில் மாஸ் காட்டிய இந்தப்படத்தில் லோகேஷ் கனகராஜின் முழுமையான டச் இல்லை என்பது ரசிகர்களின் குறையாக இருந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனை போக்கும் விதமாக தற்போது லியோவில் இணைந்துள்ளனர். இந்தப்படத்தை முழுக்க தன்னுடைய பாணியில் ஆக்ஷனுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதனை அவரே பல பேட்டிகளில் உறுதிப்படுத்தியுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ‘லியோ’ பட அறிவிப்பு வெளியான கையோடு காஷ்மீர் பறந்தனர் படக்குழுவினர்.

அங்கு ஒரு மாதத்திற்கு மேலாகவும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக முடிந்தது. அதனை தொடர்ந்து சென்னை திரும்பியதும், இங்கும் சில காட்சிகளை படமாக்கினார்கள். இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் அவரின் கதாபாத்திரம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். அவரின் கதாபாத்திரத்தின் ஆண்டனி தாஸ் என்ற பெயரையும் அறிவித்தனர்.

இணையற்ற பேரரசர்.. ஏற்ற இறக்கங்களை பார்த்தவர்: அப்பா கமல் குறித்து ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி.!

இந்நிலையில் நாளைய தினம் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாபாத்திரத்திற்கான அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ‘லியோ’ படத்திற்கான அவரின் லுக், பெயரை காண அனைவரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

‘லியோ’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது பேட்ச் ஒர்க் நடந்து வருகிறது. இதற்காக லோகேஷ் கனகராஜ் காஷ்மீர் சென்றுள்ளார். ‘லியோ’ படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து திரிஷா நடித்து வருகிறார். அத்துடன் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் லியோவில் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும், ‘லியோ’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ஆடியோ லான்ச் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ashok Selvan: பிரபல நடிகரின் மகளுடன் அசோக் செல்வனுக்கு விரைவில் டும் டும் டும்: தீயாய் பரவும் தகவல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.