சென்னை: நீட் தேர்வு விலக்கிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுதலை அடைவதற்கு முன்பே, ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று அனைவரையும் பாடச் சொன்னார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். விடுதலை பெற்ற இந்தியா அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் இந்தியாவாக தான் இருக்கும் என்று கனவு கண்டார். […]