சென்னை இன்று 77ஆம் சுதந்திரதினக் கொண்டாட்டத்தையொட்டி சென்னை கோட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுகிறார். இன்று 77-வது சுதந்திர தினம் நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. காலை 9 மணிக்குச் சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்த உள்ளார். இந்த விழா மேடையில், ‘தகைசால் தமிழர்’ விருதைத் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின், வழங்குகிறார். காலை 8.45 மணிக்குக் கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்கிறார். முதல்வருக்கு முப்படை அதிகாரிகளைத் தலைமைச் செயலாளர் அறிமுகம் […]