Independence Day Big Sale: அமேசான், பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி…. மிஸ் பண்ணிடாதீங்க

க்ரோமா விற்பனை 2023: ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தை முன்னிட்டு பல ஆன்லைன் விற்பனை தளங்களில் பல வித சேல்கள், அதாவது விற்பனைகள் நடந்துவருகின்றன. மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானிலும் சுதந்திர தின சிறப்பு சலுகைகளும் தள்ளுபடிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த தள்ளுபடிகளை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

பிளிப்கார்ட்டில் தற்போது பிக் சேல் நடந்து வருகிறது. இதில் ஓப்போ (Oppo), விவோ (Vivo), ரெட்மி (Redmi), ஐபோன் (iPhone) போன்ற பிராண்டட் போன்களில் 10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 அன்று, ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்பீக்கர்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 16 வரை இயங்கும். இது தவிர, வாடிக்கையாளர்கள் கார்டு மூலம் பணம் செலுத்தினால், கூடுதலான சிறப்பு சலுகைகளையும் பெறலாம். குரோம் பரிமாற்ற சலுகையையும் அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது.

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% வரை தள்ளுபடி கிடைக்கும்

வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், அவர்களுக்கு 10% வரை தள்ளுபடி கிடைக்கும். ஆகையயால், புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல தள்ளுபடியில் ஸ்மார்ட்போன் வாங்கலாம். குரோமாவின் விற்பனையில் இந்த சலுகை கிடைக்கின்றது. 

மிகக் குறைந்த விலையில் ஐபோன் 14 -ஐ வாங்க சூப்பர் வாய்ப்பு

இந்த சேலை பயன்படுத்திக்கொண்டு ஐபோன் 14 ஐ வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். தற்போது ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் பிக் சேல் நடந்து வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு பல வித தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் இந்த தள்ளுபடிகளை பயன்படுத்தி தரமான பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். இந்த சேலில் iPhone 14, iPhone 11 128GB Blue ஆகியவற்றில் பம்பர் தள்ளுபடி கிடைக்கிறது. 78,900 ரூபாய் விலை கொண்ட இந்த போனை இந்த சலுகையில் வெறும் ரூ.69,990 க்கு வாங்கலாம். எஸ்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் மேலும் ரூ. 4,000 தள்ளுபடி கிடைக்கும். 

இதைத் தவிர மற்றொரு சலுகையும் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. தங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் இருந்தால், அதை எக்ஸ்சேஞ்ச் சலுகை, அதாவது பரிமாற்ற சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலமும் அவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். 

விவோ ஸ்மார்ட்போன் சலுகைகள்

விவோவின் புதுய ஸ்மார்ட்போனான Vivo 5G 8GB RAM 128GB மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் எளிதாக 32,999 ரூபாய்க்கு பிளிப்கார்ட் விற்பனையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் ரூ. 4,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

ரெட்மியின் புதிய ஸ்மார்ட்ஃபோன் 

பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ரெட்மியின் Redmi 12 5G 6GB RAM உடனான 128 GB ஸ்மார்ட்போனை இந்த சேலில் மிக மலிவான விலையில் வாங்கலாம். இதை வெறும் ரூ. 11,499 -க்கு வாங்கலாம். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.