மக்களவை தேர்தல் 2023: மூன்று கருத்துக்கணிப்பு முடிவுகள்… NDAவா, INDIAவா? யாருக்கு எத்தனை சீட்?

இந்திய அரசியல் களம் 2024 மக்களவை தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக எந்த ஒரு பொதுக்கூட்டமாக இருந்தாலும் சரி. அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பின்னணியில் இருப்பதை பார்க்க முடிகிறது. இதில் எந்த ஒரு மாநிலமும் விதிவிலக்கல்ல. தேசிய பிரச்சினையாக மணிப்பூர் விவகாரம் பற்றி எரியும் நிலையில், இதை வைத்து பல்வேறு கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன.

மக்களவை தேர்தல் 2024ஆனால் இவை மக்களவை தேர்தலுக்கு எவ்வாறு பயன் தரப் போகின்றன என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஏனெனில் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் காட்சிகள் மாறலாம். கூட்டணி கணக்குகள் தவறாகலாம். ஆதரவு அலை புரட்டி போடலாம். புதிய அத்தியாயத்திற்கு அச்சாரம் கிடைக்கலாம். இந்நிலையில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ’இந்தியா’ என்ற பெயரில் மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளன.​இந்தியா கூட்டணி கணக்குகள்இவர்கள் இரண்டு ஆலோசனை கூட்டங்களை நடத்தி விட்டு மும்பையில் புதிய கூட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதுவரை பெயர் மட்டுமே இறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொள்கை, செயல் திட்டம், தொகுதிகள் பங்கீடு போன்ற விஷயங்கள் இன்னும் எஞ்சியிருக்கின்றன. இந்த விஷயங்கள் அடுத்த சில மாதங்கள் விவாதப் பொருளாக தொடரும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில் கருத்துக்கணிப்பு முடிவுகளும் அரசியல் கட்சிகளுக்கு கொம்பு சீவி விட தொடங்கியுள்ளன.

​தேசிய ஜனநாயக கூட்டணிஒன்றல்ல, இரண்டல்ல. மொத்தம் மூன்று வெவ்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த சில வாரங்களில் வெளியாகி இருக்கின்றன. இவை எடுக்கப்பட்ட பின்னணியை புரிந்து கொள்ள வேண்டும். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதைய அரசியல் சூழலில் யார் முன்னிலை பெறுவார் என்பது தான் கணிப்பாக வெளிவந்துள்ளது. இவற்றை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது யார் பெரும்பான்மை பெறுவார்? ஆட்சி யாருக்கு? என்பது தெரிய வருகிறது.
​இந்தியா டுடே கருத்துக்கணிப்புஇந்தியா டுடே சமீபத்தில் எடுத்த கருத்துக்கணிப்பு ஒன்றில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 298 இடங்கள் கிடைக்கும். பாஜக தனித்து 284 இடங்களை பிடிக்கும். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 153 இடங்கள், எஞ்சிய கட்சிகள் மொத்தமாக 92 இடங்கள் வரை பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்பாக எடுக்கப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.​டைம்ஸ் நவ் – ஈடிஜி கருத்துக்கணிப்புஎனவே இன்றைய கணக்குகள், தேர்தலை ஒட்டிய கணக்குகள் மாற வாய்ப்புகள் உள்ளன. இதேபோல் டைம்ஸ் நவ் – ஈடிஜி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு நடத்தியது. இதுவும் இந்தியா கூட்டணியின் உருவாக்கத்திற்கு முன்பு நடத்தப்பட்டது தான். இதன் முடிவுகளின் படி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 285 முதல் 325 இடங்கள் வரை கிடைக்கும்.​இந்தியா டிவி – சி.என்.எக்ஸ் கருத்துக்கணிப்புஎதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 111 முதல் 149 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில், அதாவது இந்தியா கூட்டணி அமைந்த பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு என்று பார்த்தால், அது இந்தியா டிவி – சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு தான்.
​கடைசி நேர அரசியல் ட்விஸ்ட்இதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 318 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 175 இடங்களும் கிடைக்கும். மற்றவர்கள் 50 இடங்கள் வரை பெறலாம். ஒட்டுமொத்தமாக அரசியல் களம் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு இந்தியா கூட்டணி வியூகங்களை வகுத்து களமிறங்கினால் கடைசி நேர ட்விஸ்ட்களுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.