Captain Miller: 'கேப்டன் மில்லர்' படத்திற்கு எகிறும் திடீர் எதிர்பார்ப்பு: காரணம் 'ஜெயிலர்'.!

கோலிவுட் சினிமாவை பொறுத்த அளவில் எப்போதும் ரஜினி படங்களில் அவரை தாண்டி பிற நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவது ரொம்பவே குறைவு. ஏனென்றால் ரஜினியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிகர்கள் அனைவரையும் கட்டி போட்டு விடும். ரஜினியை திரையில் பார்த்தாலே போதும் என நினைக்கும் வெறித்தனமான ரசிகர்கள், எப்படி அவர் படத்தில் பிறரை ரசிப்பார்கள்.

ஆனால் ‘ஜெயிலர்’ படம் அதனை மாற்றியுள்ளது. இந்தப்படத்தில் பிறமொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடிக்கிறார்கள் என்ற போது ரசிகர்கள் மத்தியில் பெரிதான எதிர்பார்ப்பு இல்லை. ஜெயிலரில் ரஜினி என்ன சம்பவம் செய்ய போகிறார் என்பதை காணவே ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் ‘ஜெயிலர்’ படம் வெளியான பிறகு சில நிமிட காட்சிகளிள் மட்டுமே நடித்துள்ள சிவராஜ்குமார், மோகன்லால் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தியேட்டரில் ரஜினியின் ஓபனிங் சீனுக்கு கிடைத்த அளவிற்கு முரட்டு தனமான வரவேற்பு சிவராஜ்குமார், மோகன்லால் ஓபனிங் சீனுக்கு கிடைத்துள்ளது. போதாக்குறைக்கு அனிருத்தின் மிரட்டலான இசை வேறு சிவராஜ்குமார், மோகன்லால் சீன்களை டாப் டக்கர் ஆக்கியுள்ளது. மேலும் ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் படங்களை தேடி தேடி பார்த்து வருகின்றனர் தமிழ் ரசிகர்கள்.

Jailer: கலக்கிட்டீங்க.. ‘ஜெயிலர்’ வெற்றி: நண்பர் ரஜினி, நெல்சனை பாராட்டிய கமல்.!

ஒரே படத்தில் சில நிமிட சீன்களால் தமிழ் சினிமா ரசிகர்களை மொத்தமாக கவர்ந்து விட்டார் சிவராஜ்குமார். இதனால் இவர் அடுத்தாக தமிழில் நடித்து முடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் தனுஷின் அண்ணனாக சிவராஜ்குமார் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கேப்டன் மில்லர் டீசர்

அண்மையில் வெளியான இந்தப்படத்தின் டீசரில் இடம்பெற்ற சிவராஜ்குமாரின் லுக் ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஜெயிலர் வெளியாகி, ‘கேப்டன் மில்லர்’ படத்தில் சிவராஜ்குமார் கதாபாத்திரத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 1930 ஆம் ஆண்டுகளில் நடக்கும் சம்பவங்களை போல் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் அருண் மாதேஸ்வரன். அவரின் மூன்றாவது படைப்பாக தற்போது ‘கேப்டன் மில்லர்’ உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்தப்படத்தில் சிவராஜ்குமார் நடிப்பை காண டிசம்பர் 15 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

Leo: ‘ஜெயிலர்’ கொண்டாட்டத்துக்கு இடையில் வெளியாகும் ‘லியோ’ அப்டேட்: சம்பவம் இருக்கு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.