வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் “ பலஸ்தீனத்துடன் ஒத்துழைப்பிற்கான இலங்கைக் குழு” இன்று (15) வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலிசப்ரியை சந்தித்தது. பலஸ்தீன் மக்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் மற்றும் தற்போதைய நிலை தொடர்பாக அமைச்சருக்கு அறியப்படுத்தியதுடன் எமது வரலாறு மிக்கதாக எழுந்து நிற்கும் பலஸ்தீன் மக்களுக்காக சுய நிர்ணயம் தொடர்பாக அடிப்படை உரிமைக்காக இலங்கையின் நிலையான அர்ப்பணிப்பு குறித்து மீண்டும் அமைச்சரின் அவதானத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அது மாத்திரமன்றி, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்கிணங்க, இரு மாநிலக் கட்டமைப்பிற்கு ஊடாக விரைவான தீர்மானமொன்றைக் காண்பது மிகவும் அவசியமானது என அமைச்சர் வலியுறுத்தினார்.