Ola S1 pro – ஓலா S1 Pro Gen 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

முந்தைய ஓலா எஸ்1 புரோ மாடலை விட இரண்டாம் தலைமுறை S1 Pro Gen 2 மின்சார ஸ்கூட்டரில் பல்வேறு மாற்றங்களை ஓலா எலக்ட்ரிக் தந்துள்ளது. குறிப்பாக ரேஞ்சு , அதிகப்படியான பவர் மற்றும் மெக்கானிக்கல் சார்ந்த மாற்றங்களும் உள்ளன.

முந்தைய 181 கிமீ ரேஞ்சுக்கு பதிலாக தற்பொழுது 195 கிமீ ஆக ரேஞ்சு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, பவர் 11 கிலோ வாட் ஆக அதிகரிக்கப்பட்டு டாப் ஸ்பீடு 120 kmph ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு டாப் ஸ்பீடு 116 kmph ஆக இருந்தது.

Ola S1 Pro Gen2 Escooter

புதிய GEN 2 பிளாட்ஃபாரத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஓலா எஸ்1 புரோ ஸ்கூட்டர் இப்பொழுது 116 கிலோ எடை ஆக குறைக்கப்பட்டுள்ளது. மெக்கானிக்கல் அம்சங்களில் குறிப்பாக, முந்தைய ஒற்றை பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு மாற்றாக புதிய இரட்டை டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழக்கமான ஸ்கூட்டர்களை போல வழங்கியுள்ளது.

4Kwh லித்தியம் ஐயன் பேட்டரி கொண்ட S1 Pro மாடல் அதிகபட்சமாக 11Kw பவர், டாப் ஸ்பீடு 120kmph கொண்டு சிங்கிள் சார்ஜில் 195 கிலோமீட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் 160 கிலோமீட்டர் ஈக்கோ மோடில் கிடைக்கலாம்.

S1 ப்ரோ 7.0-இன்ச் தொடுதிரை அமைப்புடன் புதிய Move OS 4.0 மேம்பாடுடன்  டர்ன் பை டர்ன் நேவிகேஷன், புளூடூத் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது மற்றும் OTA புதுப்பிப்புகளை பெற முடியும்.

Ola S1 Pro Gen 2 விலை ரூ.1,47,000 ஆக அறிவிக்கப்படுள்ள நிலையில் தற்பொழுது முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் டெலிவரி செப்டம்பர் மாத மத்தியில் துவங்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற முதல் தலைமுறை மாடலும் தொடர்ந்து சந்தையில் கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.