Rajini: நீங்க ஹீரோவா ? ரஜினியை பார்த்து கேட்ட ரசிகன்..ஓபனாக பேசிய தலைவர்..!

ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருந்து வருகின்றார். அவரின் நடிப்பு, திறன் பற்றி அனைவரும் அறிந்ததே. அதன் காரணமாக அவருக்கு கோடானகோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் அவரின் நடிப்பு மற்றும் திறமைக்காக மட்டும் தான் அவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்களா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அவரின் எளிமைகாகவும், அவரின் குணத்திற்காகவும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். என்னதான் வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ரஜினி ஜொலித்து வந்தாலும், அனைத்திற்கும் நேரம் மற்றும் கடவுள் தான் காரணம் என கூறுவார்.

ஓபனாக பேசிய ரஜினி

ஒருபோதும் தான் நம்பர் ஒன் நடிகர் என்பதை ரஜினி காட்டிக்கொள்ளவே மாட்டார். மேலும் சிறு பட்ஜெட் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள், மிகப்பெரிய நட்சத்திரங்கள், வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் என பாகுபாடு பார்க்கமாட்டார் ரஜினி. யார் படம் நன்றாக இருந்தாலும், அவருக்கு யார் படம் பிடித்திருந்தாலும் உடனே ரஜினியே அவர்களை தொடர்புகொண்டு பாராட்டுவார்.

Leo: ‘லியோ’ படம் பற்றி பேசி பதறிய மன்சூர் அலிகான்: சஸ்பென்சை உடைச்சுட்டீங்களே அண்ணா.!

இதுபோல பல சிறப்பம்சங்களை கொண்ட ரஜினியின் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அது எந்திரன் படத்தின் ப்ரமோஷனின் போது எடுக்கப்பட்ட வீடியோ. ஹிந்தியில் எந்திரன் படம் வெளியீட்டிற்காக அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஷங்கர், ரஜினி, ஏ.ஆர் ரஹ்மான் உட்பட அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த மேடையில் பேசிய ரஜினி, நான் எந்திரன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது ஒரு ஹிந்தி ரசிகர் என்னிடம் வந்தார். நான் அப்போது மேக்அப் இல்லாமல் சாதாரணமாக இருந்தேன். என்னிடம் வந்து இந்த படத்தின் ஹீரோ யார் என்று கேட்டார். அதற்கு நான் தான் ஹீரோ என்றேன். உடனே அந்த ரசிகர் என்னை ஒரு நிமிடம் உற்று பார்த்து எதுவும் பேசாமல் இருந்தார்.

பாராட்டும் ரசிகர்கள்

பிறகு சிறுது நேரம் கழித்து, நீங்க ஹீரோவா? ஹீரோயின் யார் என்றார். நான் ஐஸ்வர்யா ராய் என்றேன். மிண்டும் ஒரு நிமிடம் சைலண்டாக இருந்த அந்த ரசிகர், ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு, ஏன் இந்த படத்தில் நடிக்கிறாங்க என கேட்டுவிட்டு சென்றார் என மிகவும் கலகலப்பாக பேசினார் ரஜினி. அவர் பேசும்போது மேடையில் இருந்த அனைவரும் வயிறு குலுங்க சிரித்தனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும், உலகில் எந்த ஒரு ஹீரோவும் இவ்வளவு வெளிப்படையாக எந்த ஈகோவும் இல்லாமல் பேசவே மாட்டார் என ரஜினியை புகழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.