ரயில் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு… கொத்தாக இத்தனை ரயில்கள் ரத்து.. என்ன காரணம்?

நாளை முதல் வரும் 23 ஆம் தேதி வரை 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ஐஆர்சிடிசி அறிவித்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது.

ரயில்கள்​​
மக்களின் முதல் பயண தேர்வாக இருப்பது ரயில்கள்தான். குறைந்த டிக்கெட் கட்டணம், சோர்வு தெரியாத வசதியான பயணம், நேர சேமிப்பு போன்ற காரணங்களால் மக்கள் அதிகளவு ரயில் பயணங்களை விரும்பி வருகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
ஐஆர்சிடிசி: ரயில்கள் ரத்துஇந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த சில நாட்களாக தெற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, மத்திய கிழக்கு ரயில்வே உள்ளிட்ட டிவிஷன்களில் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சத்தீஸ்கர் வழியாக இயக்கப்படும் ஐஆர்சிடிசி ரயில்களை இந்திய ரயில்வே மீண்டும் ரத்து செய்துள்ளது.

12 ரயில்கள் ரத்துஇந்த ரயில்கள் ஆகஸ்ட் 16 முதல் 23 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. சத்தீஸ்கர் வழித்தடத்தில் இயங்கும் 12 ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. தண்டவாளத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ராய்ப்பூர்-கெவ்ரா ரயில்அதன்படி ரயில் எண் 08745 கெவ்ரா சாலை-ராய்ப்பூர் மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ராய்ப்பூர்-கெவ்ரா சாலை மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளார். ரயில் எண் 08740/08739, பிலாஸ்பூர்-ஷாதோல்-பிலாஸ்பூர் மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
​ திருப்பதியில் காத்திருக்கும் ஆபத்து… அதிர்ச்சியில் தேவஸ்தானம்… பக்தர்களுக்கு கடும் எச்சரிக்கை!​டோகர்கர்-ராய்ப்பூர் சிறப்பு ரயில்ராய்ப்பூர்-டோகர்கர் இடையே இயக்கப்படும் ரயில் எண் 08729 மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 08730 டோகர்கர்-ராய்ப்பூர் மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 07810 கடங்கி-கோண்டியா பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
​ ‘2 கிமீ சாலைக்கு ரூ.500 கோடியா? நிலவுக்கு செல்லும் இஸ்ரோ திட்டமே 450 கோடிதான்’ பாஜகவை சரமாரியாக விளாசிய காயத்ரி ரகுராம்!​கோண்டியா-கடாங்கி ரயில்ரயில் எண் 07809 கோண்டியா-கடாங்கி பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரத்து செய்யப்படும் என்றும் ரயில் எண் 07805/07806 கோண்டியா-கடங்கி-கோண்டியா இடையே இயக்கப்படும் டெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 08701/08702 ராய்ப்பூர்-துர்க்-ராய்ப்பூர் மெமு பயணிகள் சிறப்பு ரயிலை ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சியா இது… குழந்தைகளுடன் சுதந்திர தினம் கொண்டாடிய லெஜண்ட் சரவணன்!​
அம்ரீத் பாரத்
சத்தீஸ்கரில் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன், மழைக்காலங்களில் தண்டவாளங்களை பராமரிப்பதற்காக ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து ரயில்களை ரத்து செய்து வருகிறது. அம்ரீத் பாரத் திட்டத்தின் மூலம் இந்தியன் ரயில்வே நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களை புதுப்பித்து நவீனமயமாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.