வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கலிபோர்னியா: பழக்கப்படுத்தப்பட்ட நாய்களால் கோவிட் பாதிப்பை பி.சி.ஆர் சோதனையை விட திறம்பட கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கோவிட் வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பரவி 2 ஆண்டுகள் பல நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. பாதிப்புகள், உயிரிழப்புகள் என தொடர்ந்துவந்த நிலையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகே பாதிப்பு குறைந்து கட்டுக்குள் வந்தது.
கோவிட் பரவலின்போது தொற்று பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை அறிய பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வருவதற்கு ஒருசில நாட்கள் கூட ஆனது. இந்த நிலையில் நாய்கள் மூலமாகவே கோவிட் தொற்று பாதிப்பை அறிய முடியும் என்கிறார் கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா பல்கலைக்கழக பேராசிரியரும் ஆராய்ச்சியாளளுமான டாமி டிக்கி.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/gallerye_174437584_3404609.jpg)
நாய்களின் மோப்ப சக்தியை வைத்து கோவிட் மட்டுமல்லாமல் பிற வைரஸ்களையும் கூட கண்டறிய முடியும் என்று இந்த ஆய்வை நடத்திய டாமி டிக்கி கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘நாய்களை இதற்காக பழக்கப்படுத்த முடியும்.
அப்படி பழக்கப்படுத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களால் நிச்சயம் கோவிட் பாதிப்பை கண்டறிய முடியும். கோவிட் போன்ற பிற வைரஸ் பாதிப்பையும் இந்த நாய்களால் கண்டுபிடிக்க முடியும்.
இதற்காக நடத்தப்பட்ட ஆய்வின்போது, அறிகுறிகளுடன் கூடிய மற்றும் அறிகுறிகள் அல்லாத கோவிட் பாதிப்பையும் இந்த நாய்கள் சரியாக கண்டறிந்தன. என்ன மாதிரியான வைரஸ் பாதிப்பு என்பதையும் கூட நாய்களால் பிரித்துக் காண முடியும்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement