முல்லை பெரியாறு அணை: 2வது சுரங்கப் பாதை… எக்ஸ்ட்ரா நீரும், உச்ச நீதிமன்ற வழக்கும்!

காவிரி விவகாரம் என்றால் தமிழகம் – கர்நாடகா இடையிலான நதிநீர் பங்கீடு என்றால், முல்லை பெரியாறு என்றால் தமிழகம் – கேரளா இடையிலான நதிநீர் பங்கீடு என்றாகிறது. இந்த அணை இருமாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இதில் ஒரு சிக்கலான விஷயம் என்னவென்றால், அணை அமைந்துள்ள இடம் கேரளாவிற்கு சொந்தமானது. இதை பராமரிப்பதோ தமிழக அரசின் பொதுப்பணித்துறை. இதனால் அவ்வப்போது சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன.

வேகமாக சரிந்து வரும் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையின் நீர்மட்டம்.

முல்லை பெரியாறு பிரச்சினை

முல்லை பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் நீரால் தென் தமிழகத்தின் 5 மாநிலங்களை சேர்ந்த 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணை பாதுகாப்பாக இல்லை. எனவே இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றும், தண்ணீர் தேக்கி வைக்கும் அளவை குறைக்க வேண்டும் என்று கேரளா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அணை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது.

தமிழகம் – கேரளா இடையில் சர்ச்சை

தேக்கி வைக்கும் நீரின் அளவை உயர்த்துவதில் பிரச்சினையில்லை எனப் பல்வேறு விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழக அரசு தரப்பு. இந்நிலையில் தான் இரு மாநிலங்களுக்கும் இடையில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அதாவது, முல்லை பெரியாறு அணையில் இருந்து தேக்கடி சுரங்கம் வழியாக அதிகபட்சமாக விநாடிக்கு 2,500 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும். எனவே மேலும் ஒரு சுரங்கம் அமைத்தால் தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும்.

2வது சுரங்கப் பாதை

இந்த திட்டம் நிறைவேறினால் தேனி முதல் ராமநாதபுரம் வரை 259 கிலோமீட்டர் தூரத்திற்கு பாசன வசதிக்கு போதிய நீரை பெற முடியும். குடிநீருக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும். எனவே 2வது சுரங்கப் பாதை அமைக்க கேரளா அரசிற்கு உடனடியாக உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

பேபி அணை பழுது பார்த்தல்

மேலும் 23 மரங்களை வெட்டுதல், பேபி அணையை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை தொடர்பாக கோரிக்கை விடப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சினை.

உச்ச நீதிமன்றத்தை அணுக உத்தரவு

எனவே உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சரியாக இருக்கும். ஏற்கனவே முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே இந்த விவகாரத்திற்கும் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.