சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நாளை முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதுடன், செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பெண்களுக்கு […]