32500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய பொதுத்துறை நிறுவனம்நாட்டின் முன்னணி மற்றும் பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்திய ரயில்வே உள்ளது. சாமானிய மக்களின் முதல் போக்குவரத்து சாய்ஸாகவும் ரயில்கள்தான் உள்ளன. நாடு முழுவதும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.வந்தே பாரத் ரயில்கள்வேலைக்கு செல்வது, விடுமுறைக்கு செல்வது, ஆன்மிக பயணம், அர்ஜென்ட் பயணம் என அனைத்திலும் ரயில் போக்குவரத்து இன்றியமையாததாக உள்ளது. ரயில்வேயின் வருமானத்தை அதிகரிக்கவும், பயணிகளை கவரவும் அரசு பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
‘குஷி’ வேற லெவல் ரொமான்ஸ்… அதகளப்படுத்தும் சமந்தா விஜய் தேவரகொண்டா… கலக்கல் போட்டோஸ்!சிறப்பு ரயில்கள்
அதுமட்டுமின்றி பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆன்மிக தலங்களுக்கு செல்லும் சுற்றுலா ரயில்களும் இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முக்கிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
ரூ. 32500 கோடி மதிப்பில்இந்நிலையில் 32500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் திட்டங்களை மத்திய அரசு தொடங்க உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து 7 மல்டி டிராக்கிங் ட்ராக்குகள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் 2, 339 கிலோமீட்டர் நீளத்திற்கு இருப்பு பாதைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
ரயில் பயணிகளிடம் அதிகரிக்கும் மோசடி… இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!9 மாநிலங்கள்
இந்த 7 மல்டி டிராக்கிங் திட்டம் உத்தரப் பிரதேசம், பீகார், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் 35 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தில் தமிழகத்திற்கு என எந்த அறிவிப்பும் இல்லை.
தமிழகத்திற்கு இல்லை
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், சேலம் என பல தொழில் நகரங்களை கொண்டுள்ள தமிழகத்திற்கு மத்திய ரயில்வே திட்டத்தில் எந்த அறிவிப்பும் இல்லாதது ரயில் பயணிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. சாதாரண நாட்களில் கூட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
பயணிகள் ஏமாற்றம்ஆந்திரா, தெலுங்கானா வரை வந்துள்ள மத்திய அரசு, தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு 32500 கோடி ரூபாய் திட்டத்தில் எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஏற்கனவே வேலைவாய்ப்புகளில் வட இந்தியர்களே அதிகம் உள்ள நிலையில் ரயில் திட்டங்களிலும் மத்திய அரசு வட மாநிலங்களுக்கே முன்னுரிமை அளித்திருப்பது மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.