ஓணம் பம்பர் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லாட்டரி டிக்கெட்டுகளை மக்கள் வாங்கி குவித்து வருகின்றனர்.
கேரளா ஓணம் பம்பர் லாட்டரிகேரள அரசு அதிகாரப்பூர்வமாக லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. லாட்டரி துறை மூலம் வரும் வருவாயை அம்மாநில அரசு, கல்வி, மருத்துவம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது. பண்டிகை காலங்கள், பருவ காலங்கள் என அவ்வப்போது லட்டாரி துறையில் கேரள அரசு பம்பர் பரிசுகளை அள்ளி வருகிறது.அதிகரிக்கும் மோகம்கேரள லாட்டரி மீதான மோகம் கடந்த 2 ஆண்டுகளாக அண்டை மாநிலமான தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. நேரடியாக சென்றும் ஆன் லைன் மூலமாகவும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு பம்பர் பரிசாக 25 கோடி ரூபாயை அறிவித்துள்ளது.
இந்தியா கூட்டணியில் விழுந்த முதல் விக்கெட்.. மோடி சொன்னது பளிச்சிடும் போலயே!முதல் பரிசு ரூ.25 கோடி
கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவிப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா 50 லட்சம் ரூபாயும் நான்காவது பரிசாக 10 பேருக்கு தலா 20 லட்சம் ரூபாயும் ஐந்தாவது பரிசாக 10 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 10 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சாதனை படைத்த டிக்கெட் விற்பனைகடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் ஓணம் பம்பர் லாட்டரிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டு லாட்டரி டிக்கெட் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஜூலை 27 ஆம் தேதி முதல் 20.5 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஏமாற்றம்… ரூ. 32,500 கோடியில் தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை.. வஞ்சிக்கிறதா ஒன்றிய அரசு?90 லட்சம் டிக்கெட்டுகள்
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 12.83 லட்சமாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது. 25 கோடி ரூபாய் பம்பர் பரிசுக்கான டிக்கெட் விலை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 90 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சடிக்க அனுமதி பெறப்பட்டு முதற்கட்டமாக 30 லட்சம் லாட்டரிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 20ல் குலுக்கல்
வரும் செப்டம்பர் 20 ஆம் தேதிதான் இந்த பம்பர் பரிசுக்கான குலுக்கல் நடைபெறவுள்ளது. நாட்கள் நெருங்கிக்கொண்டே இருப்பதால் வரும் நாட்களில் டிக்கெட் விற்பனை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் விற்பனையில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்திலும், திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.சாதனை முறியடிப்புகடந்த ஆண்டுதான் முதல் முறையாக பரிசு தொகை 25 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. அதற்கு முன்பு முதல் பரிசு 15 கோடி ரூபாய்தான். 25 கோடியாக அறிவிக்கப்பட்டதுமே லாட்டரி டிக்கெட் விற்பனை சாதனை படைத்தது. இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசு பெறுபவர் 30 சதவீத வருமான வரிக்குப் பிறகு சுமார் ரூ.17.5 கோடியைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.