இரண்டாவது தேசிய கரப்பந்தாட்டப் போட்டி ஆகஸ்ட் மாதம் 11 முதல் 14ஆம் திகதி வரை புத்தளம் நகர சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் இராணுவ மற்றும் கடற்படை அணிகள் போட்டியிட்ட இக்கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கடற்படை ஆடவர் அணி வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
21 கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டதுடன், இராணுவ அணி மற்றும் கடற்படை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 31-36 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இராணுவ அணியைத் தோற்கடித்து, கடற்படை அணி சுற்றுப் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
அவ்வாறே, இச்சுற்றுப் போட்டியில் திறமையாக விளையாடிய வீரருக்கான விருதை கடற்படை அணியின் தலைவர் கே. எம். ஆர். எஸ். எஸ். பண்டார வென்றெடுத்ததுடன். திறமையாக தடுத்தாடும் வீரருக்கான விருதை உடற் பயிற்சி பயிற்றுனர் டபிள்யூ டி சில்வா வெற்றியீட்டினார்.