ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு வழிவகுத்த அரசியலமைப்பின் 370வது பிரிவை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் 2019 முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் இன்று 7வது நாள் விசாரணை நடைபெற்று வருகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/312160-article-370.jpg)