உக்ரைன் போருக்கிடையிலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் ரஷ்யா… நிலவின் சுற்றுப்பாதையில் லூனா 25!

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இருநாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு நடத்தி வரும் தாக்குதல்களால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இருநாடுகளும் உயிர்ச்சேதத்தையும் பொருட் சேதத்தையும் சந்தித்து வருகின்றன.

ஒரு பக்கம் போர், அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு அச்சுறுத்துவது, எதிரி நாடுகளுடன் மல்லுக்கட்டுவது என்று இருந்தாலும் தனது காரியத்திலும் கண்ணாக உள்ளது ரஷ்யா. இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பியதுமே ரஷ்யா, தனது லூனா 25 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

விட்டுச்சென்ற கள்ளக்காதலன்… மகனை கொன்று பழிதீர்த்த இளம் பெண்.. பதற வைக்கும் சம்பவம்!

கடந்த 11 ஆம் தேதி ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் 47 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவுக்கு ரஷ்யா விண்கலத்தை அனுப்பியுள்ளது. ரஷ்யாவின் லூனா-25 நிலவின் சுற்றுப்பாதையை அடைந்துள்ளது.

நிலவின் சுற்றுப்பாதையில் 5 நாட்கள் பயணிக்கும் லூனா 25 பின்னர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும். நிலவின் தென் துருவத்தில் 15 சென்டி மீட்டர் ஆழத்திற்கு குழி பறிக்கும் லூனா 25 செயற்கை கோள் அங்குள்ள மண் மாதிரிகள் மற்றும் நீர் மூலக்கூறுகளை ஆய்வு செய்யவுள்ளது.

ரூ.25 கோடி ப்பே… யாருக்கு? டிக்கெட்டுகளை வாங்கி குவிக்கும் மக்கள்… ஓணம் பம்பர் லாட்டரி சாதனை!

இந்தியாவின் சந்திராயன் விண்கலமும் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில்தான் இயங்கி வருகிறது. இன்றுதான் உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இனி விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி பயணித்து வரும் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும். பின்னர் அதில் உள்ள ரோவர் தரையிறங்கி தனது ஆய்வு பணியை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.