இலங்கையில் சர்வதேச  தரத்திலான  இரசாயன ஆய்வு கூடமொன்றை நிர்மாணிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு

உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பேராசிரியர் அலாகா சிங் மற்றும் சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

நாட்டில் பாரிய குறைபாடாகக் காணப்படும் பென்ச்மார்க் 4ஆவது சர்வதேச தரத்திலான இரசாயன ஆய்வு  கூடமொன்றை நிர்மாணித்தல் தொடர்பாக இச்சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடினர்.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல: ஜனாதிபதி இது தொடர்பாக ஆழமாக அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதற்கான ஒதுக்கீட்டிற்கு பிரதான செயற்பாடாக கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான வள ஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு என்பன அரசினால் வழங்கப்படும் எனத் தெரிரிவத்தார். இது மிகவும் விரைவான மற்றும் அத்தியவசியமான செயற்பாடாக கருத்திற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பின் போது அலாகா சிங் உரையாற்றுகையில் சர்வதேச மட்டத்தில் இரசாயன ஆய்வு கூடமொன்றை நிருமாணிப்பது தொடர்பாக அவசியமான சகல ஒத்துழைப்புக்களையும் உலக சுகாதார அமைப்பின் ஊடாக இலங்கைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

 
அவ்வாறே   உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றுடன் இணைந்து தற்போது நாட்டில் இயங்கும் சுகாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வூட்டும் மற்றும் தொடர்ச்சியாக செயற்படும் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு செயற்;படுவதாக விபரித்தார்.

நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பிற்கு ஊடாக சுகாதாரத் துறை சார் நிபுணர்கள் என சுகாதாரத் துறையில் காணப்படும் முரண்பாடுகளை தீர்க்கும் பொறிமுறையொன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என அலாகா சிங் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் பிரதான ஒருங்கிணைப்பாளரும் கொரோனா மற்றும் ஒளடதங்கள் விநியோக செயற்பாடு மற்றும் வைத்தியத் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானியும் பங்கேற்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.