Realme GT 5-ல் இடம்பெறப் போகும் 24GB ரேம் வசதி! இனிமே லேப்டாப்பே தேவை இல்லை போலையே!

ரியல்மீ மாடல் மொபைல்களில் முதல்முறையாக 24GB ரேம் வசதி கொண்ட மொபைலாக வெளியாக உள்ளது Realme GT 5. இதை அந்த நிறுவனத்தின் தலைவரான சூ குய் சேஸ். விரைவில் இந்த மொபைல் சீனாவில் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதே வருடத்தின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட Realme GT 3 மாடலின் வெற்றியை தொடர்ந்து இந்த மாடல் வெளியிடப்படவுள்ளது. அந்நிறுவனத்தின் தலைவர் வெளியிட்ட ஒரு சில தகவல்களின் படி அந்த Realme GT 5 மாடலில் இடம்பெற போகும் ஒரு சில அம்சங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ப்ராசஸர்PC : Realme
Realme GT 5 மாடல் மொபைலில் Qualcomm-ன் அதிநவீன ப்ராசஸரான Snapdragon 8 Gen 2 SoC பொருத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் கொடுத்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.
கேமராPC : Realme
கேமராவை பொறுத்தவரை பின் பக்கம் Sony IMX890 சென்சாருடன் கூடிய 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா ஆகியவை இடம்பெறலாம். முன்பக்கம் 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்பிளேPC : Realme
6.74-inch 1.5k OLED டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரிPC : Realme
நீடித்து உழைப்பதற்கு ஏற்ற வகையிலான பேட்டரி இருப்பதற்காக இரண்டு வகைகளில் பேட்டரி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒன்று 5,200mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் 150W சார்ஜிங் , மற்றொன்று 4,600mAh திறன் கொண்ட பேட்டரி 240W சார்ஜிங் என்ற வகையில் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.ஸ்டோரேஜ் வசதிPC : Realme
இதன் ஸ்டோரேஜ் வசதி 24GB ரேம் மற்றும் 1TB வரை வழங்கப்படலாம் என்று அந்நிறுவனத்தின் தலைவர் தகவலின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.