புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சையாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்து ஒன்றை நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது சர்ச்சையானது. எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். […]