கேரள மாநிலம், பாலக்காடு அருகே, பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி மாற்றி செலுத்திய செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், பாலக்காடு பள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் நாதர்ஷா. இவரது மனைவி சிபி. தம்பதியருக்கு ஏழு நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த ஐந்தாவது நாளில் பி.சி.ஜி., எனப்படும் சொட்டு மருந்து கொடுக்க, பிராயிரி ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்றனர்.
அங்கு பணியில் இருந்த செவிலியர் சஜிதா, 40, குழந்தைக்கு சொட்டு மருந்து அளிப்பதற்கு பதிலாக, 45 நாட்களுக்குப் பின் செலுத்த வேண்டிய தடுப்பூசியை செலுத்தினார். இதை கேள்வி கேட்ட தம்பதியரை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியுள்ளார்.
இதனால், சோர்வடைந்த குழந்தை, தற்போது மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் புகார் அடிப்படையில், மாவட்ட மருத்துவ அதிகாரி ரீத்தா நடத்திய விசாரணையில், செவிலியர் தவறு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement