ஸ்ருதி சண்முகப்பிரியாவின் நெகிழ்ச்சியான பதிவு
சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அண்மையில் தான் மாரடைப்பால் இறந்தார். திருமணமான ஒரு வருடத்திற்குள் ஸ்ருதியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையை விட்டு சொந்த ஊருக்கு கிளம்பிய அவர், சோஷியல் மீடியா பக்கத்தில், 'கனத்த இதயத்துடனும் பல நினைவுகளுடன் நீ இல்லாமல் முதல் முறையாக சென்னையை விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் உன்னையும் நினைவுகளையும் என் இதயத்தில் என்றென்றும் அழைத்து செல்வேன். இனிவரும் காலங்களில் இதையே செய்வேன்' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதி சண்முகப்பிரியாவின் இந்த நிலையை கண்டும் வருந்தும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.