பத்திரிகை தகவல் அதிகாரி நியமனம்| Appointment of Press Information Officer

புதுடில்லி:இந்திய தகவல் சேவை மூத்த அதிகாரி பூபேந்திர கந்தோலா, பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை இயக்குனர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கடந்த 1989ம் ஆண்டு ஐ.ஐ.எஸ்., எனப்படும், இந்திய தகவல் சேவை அதிகாரியாக பணியில் சேர்ந்த கைந்தோலா, இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன இயக்குனர், தூர்தர்ஷன் கூடுதல் இயக்குனர் ஜெனரல் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

மேலும், விளம்பரம் மற்றும் வீடியோ விளம்பர இயக்குனரகம், தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இந்தியன் பனோரமா ஆகியவற்றிலும் பணிபுரிந்துள்ளார்.

பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை இயக்குனராக அவர் பதவியேற்கும் நாளில், பதவி உயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.