புதுடில்லி: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது
இந்நிலையில் இன்று வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்நாட்டு சந்தையில் வெங்காயவிநியோகத்தை மேம்படுத்தவும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு 40 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement