சூது கவ்வும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன்.
அதன் பின் தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான போர்த்தொழில் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Snapinsta_app_350086611_237608002311846_8336678687274362405_n_1080__1_.jpg)
இதனிடையே அசோக் செல்வனுக்கும் நடிகர் அருண் பாண்டியனின் மகளும் அன்புக்கினியாள் மற்றும் தும்பா படத்தில் நடித்த நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில் தேதியை விரைவிலேயே அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/WhatsApp_Image_2023_08_20_at_11_26_26_AM.jpeg)
இந்நிலையில் இவர்களது திருமணம் செப்டம்பர் 13 ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள இட்டேரி என்ற இடத்தில் நடைபெறவுள்ளது என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.