ஆளுநருக்கு எவ்வளவு திமிர்.. பதவி போனாலும் கவலையில்ல.. ஆவேசமான உதயநிதி

நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசுக்கு எதிராகவும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்தும்

இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பாக இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

போராட்டத்தில் பேசிய உதயநிதி, “நீட் போராட்டத்தில் 21 உயிர்களை பலி கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் தற்கொலை என நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இது கொலை. இந்த கொலையை செய்தது ஒன்றிய பாஜக அரசு. அதற்கு துணை நின்றது அதிமுக. இப்போது நான் அமைச்சராக எம்.எல்.ஏ.வாகவோ பேசவில்லை. 21 குழந்தைகளின் அண்ணனாக, சாதாரண உதயநிதியாக பேசிக்கொண்டிருக்கிறேன்.

உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டால் எனது அமைச்சர் பதவி பறிபோகும் என்று கூறினார்கள். அமைச்சர் பதவியே போனாலும் கவலையில்லை. எங்கள் மாணவர்களின் கல்வி உரிமைக்காக எந்த இழப்புகள் வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எவ்வளவு திமிர், எவ்வளவு கொழுப்பு அவருக்கு? நீட் வெற்றி பெற்ற மாணவனின் தந்தை அம்மாசியப்பன் நீட் தேர்வு வேண்டாம் என்று ஆளுநரிடம் குரல் கொடுக்கிறார். அதற்கு திமிராக நெவர், எவர் என பதில் கூறுகிறார். நான் ஆளுநரிடம் கேட்கிறேன் Who Are You. நீங்கள் மக்கள் பிரதிநிதியா? நீங்கள் ஒரு போஸ்ட்மேன் மட்டும்தான். முதல்வர் சொல்வதை ஒன்றிய அரசிடம் சொல்வது மட்டும்தான் உங்கள் வேலை.

“ஆளுநர் திமிராக பேசியிருக்கிறார்” உதயநிதி கடும் கண்டனம் !

ஆளுநர் ரவி அல்ல அவர் ஆர்.எஸ்.எஸ் ரவி. நான் அவருக்கு ஒரு சவால் விடுகிறேன். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் நீங்களே முடிவு செய்கிற ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிடுங்கள். திமுகவின் தொண்டனை உங்களால் ஜெயிக்க முடியுமா? உங்களின் சித்தாத்தங்களை மக்களிடம் சொல்லுங்கள். ஜெயித்துவிட்டு வாருங்கள்.. நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம். நீட்டுக்கு ஆதரவாக நானே வருகிறேன்.

ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய மத்திய அரசு ஊழியரின் பதவியை பறிக்க வேண்டும் என பாஜக புகார் அளித்திருக்கிறார்கள். நீங்கள் எடுத்துப் பாருங்க.. தமிழ்நாட்டு மக்களை உங்களை சும்மா விட்டுவிடுவார்களா? அம்மாசியப்பனுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். அவரது வேலைக்கு எதாவது இடையூறு செய்தால் சும்மாவிடமாட்டோம் என்று கூறினார்.

மாட்டுக்காக குரல் கொடுத்த நாம் நீட்டுக்காக, ஒரு மாணவரின் உயிருக்காக குரல் கொடுக்க மாட்டோமா? இல்லாத அதிகாரம் தனக்கு இருப்பதாக கருதிக் கொண்டு நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திட முடியாது என்கிறார். அதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக கண்டனம் என்ன ஒரு வார்த்தையாவது பேசினார்களா? அதிமுக மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து போடுவார்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.