லாகூர்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து கராச்சி வரை 40 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று, பைசலாபாத்தில், எரிபொருள் ஏற்றி சென்ற வாகனம் மீது மோதியது. இதனால், அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement