பிரமாண்ட எடப்பாடி… Baakiyalakshmi TV serial
என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?!
தென்மாவட்டங்களில் எடப்பாடிக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது என்ற விமர்சனத்தை மாநாடு நடத்தி தவிடு பொடியாக்கியிருக்கிறது எடப்பாடி தரப்பு.
“கைகொடுக்காத சட்டப் போராட்டம், கைவிட்ட பா.ஜ.க எனப் பன்னீர் தரப்பைக் கலங்கடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அ.தி.மு.க-வின் மாநாடு பன்னீர் தரப்புக்கு பெரும் நெருக்கடியையும் பன்னீர் ஆதரவாளர்கள் மத்தியில் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது” என்கிறார்கள் நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் சிலர்.
இந்நிலையில் பன்னீர் அணியினரின் அடுத்த மூவ் என்ன என்பதே அதிமுக அபிமானிகள் முன்நிற்கும் கேள்வியாக உள்ள நிலையில், என்ன செய்யப்போகிறார் பன்னீர்..?
இது குறித்த அலசல் கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…
மகளிர் உரிமைத்தொகை: கள ஆய்வு எப்போது..?
தமிழக அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்தது.
அதன்படி, வரும் செப்டம்பர் 15-ம் தேதி, அண்ணா பிறந்த நாளில் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த திட்டத்தில் விடுபட்ட பெண்கள் மற்றும் உதவித்தொகை பெறும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கான மூன்று நாள் சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், விண்ணப்பம் சரிபார்ப்பு பணிகளைத் தொடர்ந்து கள ஆய்வு நடைபெற உள்ளது.
இது குறித்த தகவல்களை மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
அதிமுக மாநாட்டில் அவலம்… அண்டா அண்டாவாக வீணாக்கப்பட்ட உணவு!
அதிமுக பொன்விழா மாநாடு பிரமாண்டமாக நேற்று மதுரையில் நடந்து முடிந்தது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கு சுவையான உணவு சுடச்சுட வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து சொல்லி வந்தார்கள்.
அந்த அடிப்படையில் புளிச்சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், சைவ பிரியாணி என கலவை சாதங்கள் டன் கணக்கில் சமைக்கப்பட்டது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
“படையப்பா கிளைமாக்ஸ் சீன்..!” அதிமுக மாநாடு குறித்து ராஜலட்சுமி செந்தில்
மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா மாநாட்டில் பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாடு தான் நேற்றைய ஹாட் டாபிக்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது பாடல்கள் மூலம் மக்களை என்டர்டெயின் செய்த கலைஞர்களுள் மக்களிசை பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலட்சுமியும் ஒருவர்.
அவர்களுடைய கச்சேரி வெகுவாக பேசப்பட்ட நிலையில் இது குறித்து ராஜலட்சுமி நம்மிடம் பகிர்ந்து கொண்டவற்றை படிக்க இங்கே க்ளிக் செய்க…
ஜூனில் மட்டும் 11 லட்சம் பேருக்கு வேலையா? – ஆச்சர்ய EPFO அறிக்கை!
இந்தியாவில் ஜூன் மாதத்தில் மட்டும் 10 லட்சம் பேர் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பதாக இ.பி.எஃப்.ஓ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஜூன் மாதத்தில் முறைப்படுத்தப்பட்ட துறை நிறுவனங்களில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தோரின் எண்ணிக்கை 11 லட்சமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘அதிக ஊழல்… உள்துறை அமைச்சக ஊழியர்கள் முதலிடம்!’
மத்திய அரசின் துறைகள் மற்றும் அவற்றின் அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்மீது கடந்த ஆண்டில் மட்டும் பெறப்பட்டிருக்கும் ஊழல் புகார்களில், எண்ணிக்கையளவில் மத்திய உள்துறை அமைச்சக ஊழியர்கள்மீது அதிக புகார்கள் வந்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (CVC) தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் வெளியிட்டிருக்கும் சமீபத்திய ஆண்டறிக்கையில் இடம் பெற்றுள்ள விரிவான தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘பாக்கியலட்சுமி’ தொடரிலிருந்து விலகிய நடிகை ரித்திகா
finaவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் ‘பாக்கியலட்சுமி’. இந்தத் தொடருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இந்தத் தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ரித்திகா, தற்போது அந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.
இது குறித்த தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
———
பாக்கியலட்சுமி: `எங்கிருந்தாலும் வாழ்க!’ ரித்திகா விலகல் குறித்துப் பதிவிட்ட ‘கோபி’ சதீஷ்
பணத்தைக் குவிக்க பின்பற்ற வேண்டிய வழிகள்…
பணக்காரர்கள் எப்போதும் பணம் சம்பாதிப்பதற்குச் சில வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள்.
பெரும்பாலும் நடுத்தர மக்களுக்கு இதுபற்றித் தெரிவதில்லை…
அவற்றை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
உஷார்… அழகு நிலையங்களில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்!
‘அழகு நிலையங்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், நீங்கள் எந்த அளவுக்கு கவனமாக இருக்கிறீர்கள்?’ என்றொரு கேள்வியை முன்வைத்தால், பலரும் தலையைத்தான் சொறிந்துகொள்வோம்.
ஆனால், ‘அப்படியெல்லாம் இருக்கவே கூடாது’ என்று எச்சரிக்கும் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகர் மேனகா ராம்குமார், முக்கியமான சில விஷயங்களை இங்கே பகிர்கிறார்.
அவற்றை படிக்க இங்கே க்ளிக் செய்க…
யோகி பாபுவைப் புகழ்ந்த துல்கர் சல்மான்!
சமீபத்தில் சினிமா விகடனிற்குப் பேட்டி அளித்திருந்த துல்கரிடம் ‘உங்களுக்குப் பிடித்த காமெடி நடிகர் யார்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு யோகி பாபு என்று பதிலளித்திருந்தார். மேலும் யோகி பாபு ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் அவரை புகழ்ந்து பேசியிருந்தார்.
இந்த வீடியோ சினிமா விகடன் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அந்த வீடியோவை தற்போது யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து துல்கருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.