லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசின் இலங்கைக்கான கென்சியூலர் மனிலே திபலான்சி சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (17) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இங்கு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இரு நாடுகளுக்குமிடையிலான பௌத்த கலாசார நிகழ்ச்சிகளை மேம்படுத்துவது மற்றும் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மேலும், லாவோஸ் மக்கள் குடியரசின் வணிகச் செயற்பாடுகள் குறித்தும், அந்நாட்டிலிருந்து ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், லாவோஸ் மக்கள் குடியரசு சார்பில் இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இலங்கை-லாவோஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.