லூனா-25 தோல்வி: ரஷ்ய விஞ்ஞானி அட்மிட்| Top Russian Scientist Hospitalised Hours After Luna-25 Moon Mission Crash

மாஸ்கோ: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி வெடித்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி மைக்கேல் மரோவ்(90) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் தேதி ரஷ்யா விண்ணில் செலுத்தியது. ஆனால், திட்டமிட்டபடி நிலவில் இந்த விண்கலத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலவில் மோதி லூனா-25 விண்கலம் நொறுங்கி, தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி மைக்கேல் மரோவ்(90) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

latest tamil news

இந்நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து, மைக்கேல் மரோவ் கூறியிருப்பதாவது: லூனா-25ஐ நிலவில் தரையிறக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. நாங்கள் 50 ஆண்டுகளுக்கு பின்னர் நிலவை ஆராய விண்கலத்தை அனுப்பினோம். நிலவு குறித்த ஆராய்ச்சியில் இது புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று நினைத்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு மைக்கேல் மரோவ் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.