48,000 சதுர அடியில் 14வது லுலு ஹைபர் மார்க்கெட்… குவைத் நாட்டை புரட்டி போட்ட மெகா மால்!

லுலு மால் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமிருக்காது. சரியாக சொல்ல வேண்டுமெனில் லுலு ஹைபர் மார்க்கெட். இதன் உரிமையாளர் எம்.ஏ.யூசுப் அலி போட்ட விதை வளைகுடா நாடுகளில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் முத்திரை பதித்து வருகிறது. குறிப்பாக GCC எனப்படும் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன் ஆகிய 6 நாடுகளில் ஏராளமான கிளைகளை திறந்து வருகின்றனர்.

லுலு ஹைபர் மார்க்கெட் திறப்புஅந்த வகையில் குவைத் நாட்டில் 14வது மால் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 20) திறக்கப்பட்டது. அந்நாட்டின் தெற்கு சபாஹியாவில் உள்ள ”The Warehouse” மாலில் லுலு ஹைபர் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனை திறந்து வைத்த நபர்கள் யார், யார் என்று பார்த்தால் பெரிய லிஸ்டே சொல்லலாம். திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கான ஜெனரல் சுப்ரீம் கவுன்சிலின் துணை செயலாளர் அகமது கைத் அல் எனாஸ்சி, குவைத் நாட்டிற்கான UAE தூதர் மாதர் ஹமித் அல் நெயாடி, லுலு குழுமத் தலைவர் யூசுப் அலி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.​குவைத்தில் 14வது மால்இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், ரோமானியா, ஒமன் நாட்டிற்கான தூதர்களும் கலந்து கொண்டனர். இது ஒருபுறம் இருக்கட்டும். லுலு ஹைபர் மார்க்கெட்டின் சிறப்புகளை அறிந்து கொள்வதற்கு தான் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவர். அப்படி பார்த்தால், ’தி வேர் ஹவுஸ்’ மாலில் சுமார் 48,000 சதுர அடியில் ஹைபர் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லலாம்.
​லுலு குழுமத்தின் புதிய வரவு​​என்னென்ன வசதிகள்?அந்த அளவிற்கு கொட்டி கிடக்கின்றன. காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள், மாமிசம், கடல் உணவு, சுகாதார உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள், மாமிசம், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், விவசாயப் பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், எலக்ட்ரானிக், மொபைல் மற்றும் அவை சார்ந்த உபகரணங்கள், ஐடி சாதனங்கள், ப்ரீமியம் காஸ்மெடிக்ஸ் உள்ளிட்டவை விற்பனைக்கு இடம்பெற்றுள்ளன.
​சர்வதேச பிராண்ட்கள்இதுதவிர வளைகுடா நாடுகளில் தயாரிக்கப்படும் பிரத்யேக தொழில்நுட்ப கருவிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்கும். மேலும் சர்வதேச அளவிலான பிராண்ட்களும் வரிசை கட்டி கடையை திறந்து வைத்துள்ளன. அள்ள அள்ள குறையாத வகையில் பிராண்ட்களும், பொருட்களும் என லிஸ்டில் நீண்டு கொண்டே செல்கின்றன.
மெகா ஷாப்பிங் அனுபவம்லுலு ஹைபர் மார்க்கெட்டிற்கு வந்தால் போதும். மக்களின் ஷாப்பிங் அனுபவம் முழுமை பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை என்று அதன் நிர்வாகத்தினர் உறுதி கூறுகின்றனர். லுலு மாலின் அடுத்தகட்ட திட்டங்கள் என்று பார்த்தால் பெரிய லிஸ்டே தயாரித்து வைத்துள்ளனர்.
​புதிய மால்கள் எங்கெங்கே?அதாவது, கேரள மாநிலம் கோழிக்கோடு, கோட்டயம், எகிப்து நாட்டின் கெய்ரோ, சவுதி அரேபியாவின் ஜெட்டா, மத்திய மாகாணம், ஹபர் அல் படின், குவைத்தில் ஜவஹரத் அல் கலீஜ், ஹவாலி, இந்தோனேசியாவின் மெகா பெக்சி, பிளாசா கலிபாடா, தி பார்க் செமாரங், ஜகர்த்தா, கத்தாரில் தோஹா மால் ஆகிய நகரங்களில் லுலு மால், லுலு ஹைபர் மார்க்கெட், லுலு எக்ஸ்பிரஸ் என திறக்கப்பட உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.