வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ: உள்ளூர் மீனவர்கள் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, புகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்ற உள்ளதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறியுள்ளார். வரும் வியாழன் முதல் கதிரியக்க நீர் வெளியேற்றப்பட உள்ளது.
கடந்த 2011 ம்ஆண்டு பூகம்பம் மற்றும் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடரால் புகுஷிமா அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டது. அந்த அனுமின் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அணு உலைகளை குளிர்விக்கும் இயக்கம் நின்று போனது.
அதையடுத்து அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதில் இருந்த கதரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன. அணு உலைகளில் இருந்து வெளியேறிய கதிரியக்க நீரை, பெரிய தொட்டிகளில் அதிகாரிகள் தேக்கி வைத்தனர்.
தற்போது சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு செய்தது. கடந்த 2021ம் ஆண்டு, அந்நாட்டில் யோஷிஹைட் சுகா பிரதமராக இருந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஐ.நா.,வின் அணுசக்தி பாதுகாப்பு அமைப்பின் நிபுணர்கள் ஜப்பான் சென்று, அந்த நீரை ஆய்வு செய்தனர்.
அந்த நீர் கடலில் கலப்பது பாதுகாப்பானது தான் எனவும் அறிவித்தனர். எனினும், சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. கடலில் கதிரியக்க நீரை கலந்தால், ஜப்பானில் இருந்து கடல் உணவுகளுக்கு தடை விதிக்கப்படும் என சீனா மற்றும் ஹாங்காங் அரசுகள் அறிவித்தன.
இந்நிலையில், ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா, புகுஷிமா அணு உலையில் இருந்து கதிரியக்க நீரை, கடலுக்குள் வரும் வியாழன் முதல் திறந்து விடப்படும் எனக்கூறியுள்ளார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement