சுப்ரியா சாகு IAS சொன்ன குட் நியூஸ்… முதலில் அந்த 40 பேருக்கு… கைகோர்த்த அண்ணா பல்கலைக்கழகம்!

முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்…
இந்த பெயரை கேட்டதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள புதிய முயற்சி என்ற எண்ணம் தான் தோன்றுகிறது. நாம் நினைத்ததை போல தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 21) ”முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை” தொடங்கி வைத்தார்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள பூங்கா அமைய இருக்கும் இடத்தில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு!

தமிழக அரசின் திட்டம்

இதன் நோக்கம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புதல் மற்றும் மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவுதல் ஆகியவை ஆகும். இதற்கான முன்னெடுப்பை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மேற்கொண்டது. இந்த திட்டமானது 4 முக்கியமான விஷயங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது,

சுற்றுச்சூழல் பாதுகாப்புபுதுப்பிக்கத்தக்க ஆற்றல்பல்லுயிர் பாதுகாப்புநீடித்த வாழ்க்கை முறை

கைகோர்த்த அண்ணா யூனிவர்சிட்டி

மேற்குறிப்பிட்டவற்றில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் இளைஞர்களுக்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனமானது மேற்குறிப்பிட்ட திட்டத்தின் அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.

யாரெல்லாம் இடம்பெறுவர்

அதாவது, ஒரு திட்டத் தலைவர், 40 பசுமைத் தோழர்கள், 4 ஆராய்ச்சி இணையாளர்கள் ஆகியோர் தகுதியின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 ஆண்டுகள் பசுமை தோழர்களாக சேவை ஆற்றுவர். ஒவ்வொரு மாதமும் 60 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படும். மேலும் மடிக்கணினி, பயிற்சி வகுப்புகள், பயிற்சி பட்டறைகள் போன்றவை வழங்கப்படும்.

முதுகலை பட்டயப் படிப்பு

2 ஆண்டுகள் முடிவில் அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருந்து “காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை” என்ற முதுகலை பட்டயப் படிப்பிற்கான பட்டம் பெறுவர். இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ், காலநிலை மாற்றம் சார்ந்த நடவடிக்கைகளில் இளைஞர்களின் பங்களிப்பு பெரிதும் தேவைப்படுகிறது.

சுப்ரியா சாகு ஐஏஎஸ் விளக்கம்

இதையொட்டியே ”பசுமை புத்தாய்வு திட்டம்” என்ற பெயரில் முதல்முறை தமிழக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே மீண்டும் மஞ்சப்பை, பசுமை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்தி வருகிறோம். இதில் மகுடம் சூட்டியது போல் பசுமை புத்தாய்வு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இளைஞர்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நேரடி அனுபவத்தை பெறும் வாய்ப்பு உண்டாகும்.

தமிழகத்தில் புதிய மாற்றம்

முதலில் 40 பேரை மட்டுமே தேர்வு செய்துள்ளோம். இவர்கள் முழு வீச்சில் பசுமை திட்டத்தில் கவனம் செலுத்துவர். இவர்களின் பணியை கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப குழு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் செயல்படும். இந்த திட்டம் மிக முக்கிய மாற்றத்தை உண்டாக்கும் என்று சுப்ரியா சாகு ஐஏஎஸ் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.