சென்னை டூ பெங்களூரு ரூட்… இன்னும் 4 மாசம் தான்… சதாப்தி டூ வந்தே பாரத் ரயில்… வேற லெவல் ஏற்பாடு!

சென்னை டூ மைசூரு ரயில் வழித்தடம் என்பது தென்னிந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதற்கிடையில் ஐடி தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநகரும் இணைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மூன்று முக்கிய நகரங்களை இணைத்து விடுகிறது. இந்த வழித்தடத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயிலாக இயங்கி வந்தது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைஇதனை ஓவர்டேக் செய்யும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் படுக்கை வசதிகள் எதுவுமின்றி இருக்கைகள் உடன் பகல் நேர ரயிலாக மட்டும் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படுவது இல்லை. குறிப்பாக வாரத்தில் வியாழன் அன்று மட்டும் இயக்கப்படாது.​சென்னை டூ மைசூரு ரூட்ரயில் எண் 20607 / 20608 கொண்ட சென்னை – மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நாட்டின் 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாக அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பயன்பாட்டில் உள்ளது. இதில் 14 ஏசி சேர் கார், 2 எக்ஸிகியூடிவ் சேர் கார் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மொத்தமுள்ள 497 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து விடுகிறது.
​சதாப்தி எக்ஸ்பிரஸ்இது சென்னை, காட்பாடி, பெங்களூரு, மைசூரு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது வாரத்தில் புதன்கிழமை மட்டும் இயக்கப்படாது. இதேபோல் 12007 / 12008 என்ற எண் கொண்ட சென்னை – மைசூரு – சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இதுவும் புதன்கிழமை அன்று இயக்கப்படாது.
​புதன் அன்று ரயில் சேவை இல்லைமேற்குறிப்பிட்ட அதே 4 ரயில் நிலையங்களில் தான் நின்று செல்லும். எனவே சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்தில் புதன் அன்று அதிவிரைவு ரயில் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இந்த குறையை போக்கும் வகையில் தென்மேற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சதாப்த் டூ வந்தே பாரத் சேவைஅதாவது, 12007 / 12008 கொண்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் புதன் கிழமைக்கு பதில் வியாழன் அன்று இயக்கப்படாது. அதாவது புதன் அன்று சதாப்தி ரயில் சேவையை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதுவே வியாழன் அன்று சதாப்தி எக்ஸ்பிரஸ்க்கு பதிலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
ப்ரீமியம் ரயில்இதன்மூலம் சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்தில் ப்ரீமியம் ரயில் சேவையை வாரத்தின் 7 நாட்களும் பெற முடியும். விமானப் பயணிகள் கூட இந்த ரயில் சேவை பக்கம் திரும்ப வாய்ப்புண்டு. இதற்காக இன்னும் 4 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.