டெல்லியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரி பிரேமோதய் காக்கா, தன்னுடைய மறைந்த நண்பரின் 16 வயது மகளைப் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துவந்ததும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அந்த அதிகாரியின் மனைவி கருக்கலைப்பு மாத்திரை கொடுத்துவந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மனதளவில் கடும் பாதிப்புக்குள்ளான சிறுமி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்திருந்தார்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக, போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த டெல்லி போலீஸ் பிரேமோதய் காக்கா, அவரின் மனைவி என இருவரையும் நேற்று கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து, பிரேமோதய் காக்காவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் முதல்வர் கெஜ்ரிவால்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியைச் சந்திக்க, அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு நேற்று சென்ற டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், சிறுமியைச் சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மருத்துவமனையிலேயே தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
இது தொடர்பாக மருத்துவமனையில் நேற்று ஊடகத்திடம் பேசிய ஸ்வாதி மாலிவால், “டெல்லி போலீஸ் குண்டர்தனத்தில் ஈடுபடுகிறது. அந்த சிறுமியையோ அல்லது சிறுமியின் தாயையோ சந்திக்க போலீஸ் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை.
டெல்லி போலீஸ், என்னிடமிருந்து எதை மறைக்க விரும்புகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், சிறுமியின் தாயைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வேளையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவரான என்னை ஏன் அனுமதிக்கவில்லை” என்று கேள்வியெழுப்பினார்.
அதையடுத்து, இத்தகைய செயல் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம், மருத்துவமனைக்கு வந்த ஸ்வாதி மாலிவாலைச் சந்தித்த மருத்துவமனையின் இயக்குநர், உள்ளே டிசிபி மற்றும் ஏசிபி இருப்பதாகவும், சிறுமியை அவர் சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்று அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. பின்னர், ஸ்வாதி மாலிவால் இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே இருந்தார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs