மும்பை: தனது தாய் வேறொரு ஆணுடன் மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பி பேசிவந்ததை பார்த்த 17 வயது மகன், தாயை கோடாரியால் தாக்கினான். இதில் படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மஹாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள பரோல் பகுதியில் கடந்த ஆக.,20ம் தேதி இரவில் 35 வயதான சோனாலி கோக்ரா என்ற பெண், தனது 17 வயது மகனுக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சோனாலி வேறொரு ஆணுடன் மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பி பேசிவந்துள்ளார்.
தனது தாயின் நடத்தையில் சந்தேகமடைந்த மகன், இது குறித்து கேட்டுள்ளான். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கோடாரியால் சோனாலியை பலமாக தாக்கிவிட்டு தப்பியோடினான். இதில் படுகாயமடைந்த சோனாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மாண்டவி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மகனை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement