பெங்களூரு : பெங்களூரு கே.ஆர்.புரம் தாலுகா அலுவலகத்தில், நில ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சீனிவாசமூர்த்தி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதனால், சீனிவாசமூர்த்திக்கு சொந்தமான பெங்களூரு, துமகூரில் உள்ள வீடுகள், உறவினர்கள் வீடுகள் என 14 இடங்களில் நேற்று, லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது மனைவி, சகோதரி பெயரில் ஐந்து மதுபான கடைகள் நடத்தியதற்கான ஆவணங்கள், வீடுகள், வீட்டு மனைகள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்களும் சிக்கின. மனைவி, சகோதரி, சகோதரர் பெயர்களில், ஹோட்டல் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக 3.53 கோடி ரூபாய் சொத்து குவித்திருந்ததும் தெரியவந்தது. வீடுகளில் சிக்கிய ஆவணங்களை, போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 17ம் தேதி மாநிலம் முழுதும் 14 அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement