கடந்த இரண்டு வாரங்களாக எங்கு திரும்பினாலும் ‘ஜெயிலர்’ படம் குறித்த பேசுக்கள் தான். அந்தளவிற்கு ‘ஜெயிலர்’ கொண்டாட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடுமே மூழ்கியுள்ளது என சொல்லாம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள ரஜினி படம் என்பதாலோ என்னவோ, திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் தொடர்ச்சியாக அலைமோதி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள பிரபலம் மோகன்லால், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது இந்தப்படம். திரை முழுவதும் நமக்கு பரிட்சயமான முகங்கள் இருந்தாலும், ரஜினி தனது மாஸான ஸ்டைலால் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்துவிட்டார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படத்தில் ரஜினி டீமில் இருக்கும் ஒருவராக நடித்துள்ளார் ஜாபர் சாதிக். கமலின் விக்ரம், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படங்களில் எல்லாம் கலக்கியவர் தான் ஜாபர் சாதிக். ‘ஜெயிலர்’ படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தாலும் ரஜினியுடன் டான்ஸ், அவர் டீமில் ஒருவராக நடித்து ஸ்கோர் செய்துவிட்டார். இதனாலே அவரின் ரோல் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
இந்நிலையில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பின் போது ரஜினி தனக்கு அளித்த பரிசு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் ஜாபர் சாதிக். அப்படி என்ன கிப்ட் அவருக்கு கிடைத்திருக்கிறது என்றால், தான் பயன்படுத்திய கூலிங் கிளாஸ் கண்ணாடியை ஜாபர் சாதிக் கேட்டதும் கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இலங்கை பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்த ‘ஜெயிலர்’: மாஸ் காட்டும் தலைவர்.!
இதைப்பற்றி ஜாபர் சாதிக், நான் கேட்டேன். அவர் கொடுத்துட்டார் என ரஜினி கொடுத்த கண்ணாடியின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் இது கிப்ட் இல்லை. தலைவரோட ஆசீர்வாதம். கொடுத்து வச்சவர் ப்ரோ நீங்க. எனக்கு ஒரு தடவை கொடுங்க. போட்டு பார்த்துட்டு தர்றேன் என கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.
இதனிடையில் ‘ஜெயிலர்’ படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. ரிலீசான ஒரே வாரத்தில் ரூ. 375 கோடி வசூலித்து, தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது. மேலும் வெளியான 12 நாட்களில் ரூ. 550 கோடி வசூலித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ரஜினி ரசிகர்கள் விண்டேஜ் தலைவர் இஸ் பேக் என கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
‘ஜெயிலர்’ படத்தால் சாதனை படைத்த ரஜினி: வசூல் வேட்டை.!