மிசோரோம் மாநிலம் சைரங் என்ற இடத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 17 உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
40 பேர் வரை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சில இடிபாடுகளுக்கு இடையே சிக்கித் தவிக்கின்றனர். மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.