ரஜினி – கமல் இணைந்து நடிக்கப்போகும் படத்தில் அஜித் கேமியோவா? இது லிஸ்ட்லயே இல்லையே..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் தரமான வெற்றியை பதிவு செய்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி பிளாக்பஸ்டர் வெற்றியை ஜெயிலர் படத்தின் மூலம் பெற்றுள்ளார். இதனால் ரஜினி மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

கடந்த சில படங்களாக ரஜினிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றவுடன் பலர் அவரை விமர்சித்தனர். இனி ரஜினியின் படங்கள் ஓடாது என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் ஜெயிலர் படத்தின் மூலம் தரமான பதிலடி கொடுத்துள்ளார் ரஜினி.

ரஜினி – கமல் கூட்டணி

இந்நிலையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைபிரபலங்கள் பலரும் ஜெயிலர் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பிரவீன் காந்தி ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு மனதார பாராட்டியுள்ளார். மேலும் அவருக்கு ஒரு விஷயம் தோன்றியதாகவும், அது கண்டிப்பாக எதிர்காலத்தில் நடக்கும் என்றும் கூறியுள்ளார் பிரவீன் காந்தி.

ரோல்ஸ் ராய்ஸ் காரா ? வெறும் டிவி மட்டும் தான்..என்ன நெல்சன் இப்படி சொல்லிட்டாரு..!

அதாவது ஜெயிலர் படத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. 40 வருடங்கள் கழித்து ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என எனக்கு தோன்றியது. ஆனால் அது எதிர்காலத்தில் கண்டிப்பாக நடக்கும். மேலும் அந்த படத்தில் அஜித் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பார். நான் அடித்து கூறுகின்றான், நூறு சதவீதம் இது கண்டிப்பாக நடக்கும்.

அஜித் கேமியோ

ஆனால் யார் இயக்குனர் என எனக்கு தெரியாது. இருந்தாலும் இந்த கூட்டணி கண்டிப்பாக நடக்கும். இது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஷாரூக்கானும் நடிப்பார் என கூறினார் பிரவீன் காந்தி. மேலும் அவர் பேசுகையில் ஹாலிவுட் திரையுலகில் AVENGERS, MAARVEL போல தமிழிலும் விரைவில் அந்த ட்ரெண்ட் உருவாகும்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

முன்னணி நட்சத்திரங்கள் பலர் ஒன்றாக இணைந்து படங்களில் நடிப்பார்கள். கண்டிப்பாக அது நடக்கும் என கூறினார் பிரவீன் காந்தி. இந்நிலையில் இவரின் பேச்சை கேட்ட ரசிகர்கள் சிலர், இது சாத்தியமில்லாத ஒன்று தான், இருந்தாலும் இந்த கூட்டணி நடந்தால் உலக சினிமாவையே திருப்பிப்போடும் நிகழ்வாக இருக்கும் என தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது பிரவீன் காந்தி பேசிய இந்த வீடியோ தான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.