ரஷ்யா, இந்தியாவை தொடர்ந்து… நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் ஜப்பான்… அதுவும் இந்த மாசத்துலேயே!

நிலவில் ஆய்வுகளை செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில் ரஷ்யா நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வு லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பியது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட லூனா 25 விண்கலம், ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தல் தரையிறங்குட்ம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 20 ஆம் தேதி லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி நொறுங்கியது. இதனால் துரதிர்ஷ்டவசமாக அந்த திட்டம் தோல்வில் முடிந்தது. இந்நிலையில் இந்தியா கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்திய சந்திரயான் 3 இன்று நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

Big Breaking: வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்!

இதனை தொடர்ந்து உலக நாடுகள் பலவும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜப்பானும் நிலவில் ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA ஆகஸ்ட் 26 ஆம் தேதி நிலவை ஆய்வு செய்வதற்காக ஸ்மார்ட் லேண்டர் அல்லது SLIM விண்கலத்தை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது.

இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலத்தின் வெற்றிகரமான சாஃப்ட் லேண்டிற்கு பிறகு 3 நாட்கள் கழித்து ஜப்பான் தனது விண்கலத்தை நிலவிற்கு அனுப்ப உள்ளது. ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி வரும் 26ஆம் தேதி காலை 6:04 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

திருப்பதி செல்லும் பக்கதர்களுக்கு இனி அந்த கவலை வேண்டாம்… தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

துல்லியமான நிலவின் தரையிறங்கும் நுட்பங்களை நிரூபிப்பதே இந்த பணியின் முக்கிய நோக்கமாகும், இது மிகவும் சவாலான தரையிறங்கும் பகுதிகளை அணுகக்கூடியதாக மாற்ற உதவும் எனவும் “LUNAR-A சந்திரனின் உட்புறத்தை நேரடியாக ஆய்வு செய்யும் எனவும் இது சந்திரனின் தோற்றம் மற்றும் பரிணாமம் பற்றிய பல தரவுகளை வழங்கும் என்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SLIM விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இறங்குவதற்கு தரையிறங்கும் ரேடார் பொருத்தப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் வழிகளில் ஏற்படும் தடைகளை கண்டறிந்து செயல்பட முடியும் என்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA தெரிவித்துள்ளது.

சென்னை ஐசிஎஃப்பில் தயாரிக்கப்படும் புஷ் புல் ரயிலில் இத்தனை வசதிகளா? வேற லெவலில் இறங்கிய இந்திய ரயில்வே!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.