“நம் தேசத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது” – சந்திரயான்-3 வெற்றி குறித்து திருமாவளவன்

சென்னை: “நம் தேசத்தின் மதிப்பு வல்லரசுகளே வியந்து பார்க்கும் வகையில் உலக அரங்கில் வெகுவாக உயர்ந்துள்ளது” என சந்திரயான் 3 வெற்றி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 ஆய்வுக் கலன் வெற்றிகரமாகத் தரை இறங்கியுள்ளது. இதனால் நம் தேசத்தின் மதிப்பு வல்லரசுகளே வியந்து பார்க்கும் வகையில் உலக அரங்கில் வெகுவாக உயர்ந்துள்ளது.

பழமைவாத மூடநம்பிக்கைகளைத் தகர்த்து, இன்றைய நமது அறிவியல் – தொழில்நுட்பத் திறன் மனிதகுலத்தின் நாகரிக வளர்ச்சியை மென்மேலும் செழுமையடைய வைத்துள்ளது என்பதை உணர்த்துகிறது. இது மகத்தான வரலாற்றுச் சாதனை. இச்சாதனையைப் படைத்துள்ள நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.